திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும் மாணவியர்கள் தீவிரமாக விதைப்பந்துகளைத் தயாரித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் சுமார் 5 ஆயிரம் மாணவியர்கள், அருட்சகோதரி வசந்தி மேரி பிருந்தா அவர்களின் தலைமையில் இணைந்து இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்துள்ளனர். வருங்கால சந்ததியினருக்குப் பசுமையான தமிழகத்தை பசுமையாக்கும் உன்னத நோக்கத்துடன் மாணவியர்கள் தொடர்ச்சியாக இத்தகைய ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவியர்களின் இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து 1 கோடி விதைப்பந்து தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வெங்கடாம்பட்டி திருமாறன் கூறுகையில், "மாணவியர்களின் இந்தச் சுற்றுச்சூழல் பணி, வருங்கால சந்ததியினருக்குப் பசுமையான தமிழகத்தை உருவாக்க மிகவும் உதவும். மேலும், இதுபோன்ற முயற்சிகள் மற்ற பள்ளிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்" எனப் பாராட்டுத் தெரிவித்தார்.

