2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற டிசம்பர் 16-ஆம் தேதி வங்கதேசத்தின் டாக்கா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்துள்ள நிலையில், வங்கதேச விடுதலை வெற்றி நாளான டிசம்பர் 16 அன்று அவர் நாடு திரும்பவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி வங்கதேச விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்தார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்கில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவைக் குற்றவாளி என அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துவது குறித்து இந்திய அரசுடன் வங்கதேச அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச சட்டத்துறை அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான், ஷேக் ஹசீனாவைத் திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், வருகின்ற டிசம்பர் 16 அன்று வங்கதேசம் திரும்பவுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையத் மொஸம்மல் அலி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற்ற வெற்றி நாளான டிசம்பர் 16 அன்று ஷேக் ஹசீனா டாக்கா திரும்பவுள்ளதாகவும், தற்போது இந்தியாவிலிருந்து வங்கதேசம் செல்வதற்குத் தேவையான பயண ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

