தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் கீழ வேலாயுதபுரம் கிராம கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் சாட்டை கருப்பசாமி (45) இவருக்கு திருமணமாகி இசக்கி அம்மாள் என்ற மனைவியும் ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர்
இந்த நிலையில் சாட்டை கருப்பசாமி தினசரி வேலைக்கு சென்று விட்டு மதுபோதையில் வீட்டுக்கு வருவாராம் இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமா இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சாட்டை கர்ப்பசாமியை அவரது மனைவி மற்றும் மகன்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சாட்டை கருப்பசாமி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

