கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே காரங்காடு குசவன்குழி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் - லலிதா தம்பதியரின் மகன் சிவா (24). இவர் சென்னையில் உள்ள பிரபலக் கல்லூரியில் மரைன் என்ஜினீயரிங் படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், சிவா தனது இருசக்கர வாகனத்தில் அழகியமண்டபம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தக்கலை அருகே மணலி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இக்கோர விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த சிவாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காகத் தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்துத் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்துத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

