தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலி நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். அந்த வகையில் நடப்பு ஆண்டு தசரா திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்காரம் வரும் 20ம் தேதி இரவு குலசை சிதம்பரேவரர் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. தசரா திருவிழா நெருங்கி வரும் நிலையில் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஸ்ரீநாத் இன்று குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், தசரா திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

