கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மு.க. இப்ராஹிமிற்குப் பாராட்டு விழாவும், 'சிரிப்பு சிரப்பு' புத்தகத் திறனாய்வு நிகழ்ச்சியும் 'சகாராவைத் தாண்டாத ஒட்டகம்' பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் 15-வது நிகழ்வாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ப. ஜான் கணேஷ் தலைமை வகித்தார். இந்திராணி, ராஜேஷ் சங்கரப்பிள்ளை, முருகசரஸ்வதி, ஜெகநாதன், செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போத்திராஜ் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. மனோகர், ஆசிரியர்கள் மகேந்திரன், கருப்பசாமி, ஸ்ரீதர், கல்யாணசுந்தரம் மற்றும் ஆசிரியைகள் முருக ரத்தினம், பேச்சியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு நல்லாசிரியர் மு.க. இப்ராஹிமின் கல்விச் சேவையைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற நூல் திறனாய்வு நிகழ்வில், ஆசிரியர் கார்த்திகேயன், சாந்தி பெருமாள், விரிவுரையாளர் ராஜலட்சுமி மற்றும் மாணவி கற்பகவள்ளி ஆகியோர் 'சிரிப்பு சிரப்பு' புத்தகத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகத் திறனாய்வு செய்து பேசினர்.

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மு.க. இப்ராஹிமிற்கு இலக்கியச் சாரல் நிறுவனர் தினகரன் பாராட்டு விருது வழங்கிச் சிறப்பித்தார். மேலும், 'உரத்த சிந்தனை' அமைப்பைச் சேர்ந்த சிவானந்தம், 'சிரிப்பு சிரப்பு' புத்தகத்திற்காகப் 'படைப்புச் செம்மல்' விருதை வழங்கிப் பாராட்டினார். விழாவின் நிறைவில் நல்லாசிரியர் மு.க. இப்ராஹிம் ஏற்புரையாற்றினார்.