தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அலங்காரியம்மன் தெரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் முப்பெரும் விழாவை முன்னிட்டு அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது.

மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் துவக்கிவைத்தார்.

தொடர்ந்து உலக சமாதானம் வேண்டி கஞ்சி கலயம், தீச்சட்டி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு சேலைகளை மற்ற தலைவர் சிவகாமி வழங்கினார்.அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.

epmOmsakthi1.jpg

விழாவில், ஆன்மிக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாத், சக்திவேல், தளவாய்புரம் ராஜ், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், மந்திதோப்பு ராஜதுரை, மாரியம்மாள், கிருஷ்ணம்மாள், கமலா, சுதா, ராணி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.