ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் வீடியோ!

Sponsored Ads


ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் வீடியோ!
பதிவு செய்த நாள் புதன் 10, நவம்பர் 2021
நேரம் 3:34:51 PM (IST)

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார். முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்துள்ளார்கள். மேலும், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படம் 2022 ஜனவரி 7 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக் கூத்து பாடலின் காணொளி வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடலை ராகுல், யாஸின் நிஸார் பாடியுள்ளார்கள்.Thoothukudi Business Directory