தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா!

பதிவு செய்த நாள் | புதன் 13, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 10:35:03 AM (IST) |
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் செயலர் சுப்புலட்சுமி சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பொங்கல் விழாவின் துவக்கமாக கணிதத்துறை பேராசிரியை மீனாகுமாரி பொங்கல் பூஜை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் இசைக் குழுவினர் பக்திபாடல்கள் பாடினர். கல்லூரியின் கலைக் குழு சார்பில் ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், கிராமிய நடனம், பரத நாட்டியம் போன்ற போட்டிகளில் மாணவியர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்