சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Sponsored Ads


சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு
பதிவு செய்த நாள் வியாழன் 1, செப்டம்பர் 2022
நேரம் 4:52:36 PM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது. பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.



Thoothukudi Business Directory