தூத்துக்குடி நகர அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்விச் சாதனைகளில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான நகர அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் மற்றும் போல்வால்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றுச் சான்றிதழ்களை வென்றனர்.
தடகளம் மற்றும் போட்டியில் ஜெருஷா, ஜாக்குலின் சாராள், மதனா, காவியா, காருண்யா, பாலதர்ஷினி, திவ்யதர்ஷினி, லக்ஷனா. வாலிபால் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கபில் கிளப் வாலிபால் போட்டியில் பள்ளி அணி 2-ஆம் இடம் பிடித்தது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபாடி போட்டியில் பள்ளி அணி 4-ஆம் இடம் பெற்றுச் சாதனை படைத்தது. இத்துடன், 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ்வழிக் கல்வியில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி அபிநயாவிற்கு இந்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் பரிசுத்தொகையும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்த மாணவிகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தாளாளர் சுதன் கீலர், தலைமை ஆசிரியர் மெர்லின் பாக்கியவதி மற்றும் ஆசிரியர்கள் திரளாகப் பாராட்டு தெரிவித்தனர்.

