தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் அளித்தும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தேமுதிக மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிறந்தநாள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜபாண்டி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்கச்சாமி, மேற்கு ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ், நகரச் செயலாளர் கோட்டைச்சாமி, நகர அவைத் தலைவர் மணிகண்டன், மாவட்டப் பிரதிநிதிகள் வீராச்சாமி, முரளி, ஆதிலிங்கம் மற்றும் கிளைச் செயலாளர்கள் சங்கரன், மணிகண்டன், கந்தராஜ், முருகேசன், சங்கர்கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் மகளிர் அணி நிர்வாகி ராணி பரிமளா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் இதில் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குச் சிறப்பு உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.

