» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பு: திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சனி 18, ஏப்ரல் 2026 5:01:01 PM (IST)
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தின் அரசியல் பலத்தை அதிகரிக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம், தமிழகம் தனக்குரிய பங்கான கூடுதலாக 20 நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால் தமிழகம் 9 எம்பிக்களை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், தற்போது 2026 மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது இன்னும் கூடுதலாக எம்பிக்களை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியின் போதே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்தார் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார். ஆனால், இன்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் அந்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம், தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்குப் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவித்துவிட்டு, பெண்கள் அதிகாரம் பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட்டு திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தப் பிரதமர் வழங்கிய வாய்ப்பைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகத் திமுகவே காரணமாகிவிட்டது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!
வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)








