» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 92 பேர் போட்டி: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 23-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, 6-ஆம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தம் 188 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 7-ஆம் தேதி நடந்தது. அப்போது 56 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 117 வேட்பாளர்களின் 132 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் வேட்பாளர்களின் கூடுதல் வேட்புமனுக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதையடுத்து 6 தொகுதியிலும் 117 பேர் தகுதியான வேட்பாளர்கள் என அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடியில் 7 பேர், ஸ்ரீவைகுண்டத்தில் 4 பேர், ஓட்டப்பிடாரத்தில் 8 பேர், கோவில்பட்டியில் 2 பேர், திருச்செந்தூரில் ஒருவர், கோவில்பட்டியில் 2 பேர், விளாத்திகுளத்தில் 3 பேர் என மொத்தம் 25 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு பிறகு மீதம் உள்ள 92 வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணி, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் இருந்து, அவர்கள் விரும்பும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கேட்ட இடங்களில் குலுக்கல் முறையில் சின்னங்கள் வழங்கப்பட்டன. பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி தொகுதி

1. பெ.கீதாஜீவன் (தி.மு.க.)

2. சி.த.செல்லப்பாண்டியன் (அ.தி.மு.க.)

3. ஸ்ரீநாத் (த.வெ.க.)

4. ஆர்.ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாம் தமிழர்கட்சி)

5. எஸ்.ஏசாதுரை (அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்)

6. என்.ஏ.கிதர்பிஸ்மி (தமிழக வாழ்வுரிமை கட்சி)

7. டி.சகாயம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு லெனினிஸ்டு)

8. எம்.பிரசன்னகுமார் (மக்கள் நல்வாழ்வு கட்சி)

9. பி.பி.எம்.டி.பொன்குமரன் (நம்நாடு நம்மக்கள் நம்எதிர்காலம் கட்சி)

10. எம்.வி.ஸ்ரீகாந்த் (நாம் இந்தியர் கட்சி)

11. ஜெ.சாமுவேல் (சுயே)

12. எஸ்.டி.ஆர்.எம்.தினகரன் (சுயே)

13. பி.பாபு (சுயே)

14. பி.மருதுபாண்டியன் (சுயே)

15. எஸ்.முனீசுவர மூர்த்தி (சுயே)

ஓட்டப்பிடாரம் தொகுதி

1. ராமஜெயம் (தி.மு.க.)

2. சுந்தரராஜ் (அ.ம.மு.க.)

3. டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

4. அனுசியா (நாம் தமிழர்)

5. மதன்ராஜா (த.வெ.க.)

6. அருணாதேவி (நம்நாடு நம்மக்கள் நம் எதிர்காலம் கட்சி)

7. சுப்புலட்சுமி (நாம் இந்தியர் கட்சி)

8. செல்வக்குமார் (தமிழக வாழ்வுரிமை கட்சி)

9. ஆனந்த் (சுயே)

10. முத்துசெல்வம் (சுயே)

11. முருகன் (சுயே)

12. லட்சுமணன் (சுயே)

13. வேதபிரகாஷ் (சுயே)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி

1. ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்)

2. சண்முகநாதன் (அ.தி.மு.க.)

3. சரவணன் (த.வெ.க.)

4. சண்முகசுந்தரம் (நாம் தமிழர் கட்சி)

5. சுடலைமணி (நம்நாடு நம்மக்கள் நம் எதிர்காலம் கட்சி)

6. சுப்பிரமணியன் (புதிய மக்கள் தமிழ்தேசம் கட்சி)

7. பாரத் (நாம் இந்தியர் கட்சி)

8. முண்டசாமி (விஸ்வ தமிழ் கழகம்)

9. முத்துராமலிங்கம் (அகில இந்திய பார்வர்டு பிளாக்)

10. ராஜசுதன் (புதிய தமிழகம்)

11. வியனரசு (தமிழக வாழ்வுரிமை கட்சி)

12. அருணாச்சலம் (சுயே)

13. பேராயர் டாக்டர் காட்ப்ரே நோபுள் (சுயே)

14. முருகன் (சுயே)

15. வசந்த் பர்னாந்து (சுயே)

திருச்செந்தூர் தொகுதி

1. அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.)

2. ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா)

3. ஒபிலியா (நாம் தமிழர் கட்சி)

4. முருகன் (த.வெ.க.)

5. கோபாலகிருஷ்ணன் (அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்)

6. பாக்கியா சாம் (நாம் இந்தியர் கட்சி)

7. மகாராஜன் (புதிய மக்கள் தமிழ்தேசம் கட்சி)

8. ராஸிக் முஸம்மில் (தமிழக வாழ்வுரிமை கட்சி)

9. சேகுஅப்துல்காதர் (சுயே)

10. மீராசாகிபு (சுயே)

11. ராஜலிங்கம் (சுயே)

12. வீரப்பா (சுயே)

13. வெங்கடேஷ்பெருமாள் (சுயே)

விளாத்திகுளம் ெதாகுதி

1. மார்க்கண்டேயன் (தி.மு.க.)

2. சத்யா (அ.தி.மு.க.)

3. பாலாஜி ராமச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி)

4. காசிராம் (த.வெ.க.)

5. பெருமாள் (நாம் இந்தியர் கட்சி)

6. பொன்பாண்டி (அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்)

7. மாடசாமி (புதிய தமிழகம்)

8. அஜய்குமார் (சுயே)

9. கணேசன் (சுயே)

10. பட்டுராஜ் (சுயே)

11. பிரபாகர் (சுயே)

12. பொன்னுசாமி (சுயே)

13. முனியசாமி (சுயே)

14. ராஜசேகரன் (சுயே)

15. ஜெயக்குமார் (சுயே)

கோவில்பட்டி தொகுதி

1. கடம்பூர் ராஜூ (அ.தி.மு.க.)

2. கருணாநிதி (தி.மு.க.)

3. பாண்டி (நாம் தமிழர் கட்சி)

4. பாலசுப்பிரமணியன் (த.வெ.க.)

5. ராமச்சந்திரா (பகுஜன் சமாஜ் கட்சி)

6. ஆறுமுகவேல் (நாம் இந்தியர் கட்சி)

7. கண்ணன் (அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்)

8. சரவணன் (தமிழ்ப்பேரரசு கட்சி)

9. ஹரிபாலகிருஷ்ணன் (புதிய மக்கள் தமிழ்தேசம்)

10. அதிகுமார்குடும்பர் (சுயே)

11. குணசேகரன் (சுயே)

12. குருசாமி (சுயே)

13. சின்னமகாராஜா (சுயே)

14. சேகர் (சுயே)

15. பரமசிவன் (சுயே)

16. பவுன்துரை (சுயே)

17. பாண்டி முனீசுவரி (சுயே)

18. பிரேம்குமார் (சுயே)

19. பொன்னுசாமி (சுயே)

20. முனீசுரவன் (சுயே)

21. ரெங்கநாயகலு (சுயே).


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory