» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

2026 தேர்தலுக்கு கற்பனை வீடியோ போதும் என்று நினைத்து விட்டார்கள் : முதல்வர் விமர்சனம்!

செவ்வாய் 17, ஜூன் 2025 4:57:38 PM (IST)

மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் 2027ம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா? இந்த ஒரு கற்பனை காட்சிகளை உருவாக்கவே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education


New Shape Tailors







Thoothukudi Business Directory