» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
வியாழன் 29, மே 2025 4:59:01 PM (IST)
நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டதாகவும், அதன் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.மேலும், 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி, நியாயவிலை கடை ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1,10,000 கோடி வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு பயிர்கடன் மட்டும் அல்லாமல், கால்நடைகள் வாங்குவதற்கு அதிகயளவில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 ஆயிரம் பேர் கூட்டுறவுத் துறைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது. தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை, அதனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது.
கூட்டுறவுத்துறை சார்பில் 60 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 35-40 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

யாருக்கு வெற்றி? இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல்: தமிழக மக்கள் மிகுந்த ஆர்வம்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:17:55 AM (IST)

தமிழகத்தில் 85% வாக்குகள் பதிவு : 74 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 7:58:36 PM (IST)

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)










