» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மதுக்கடைகள் செயல்படுவதில் முதல்வருக்கு விருப்பம் இல்லை : அமைச்சர் முத்துசாமி
வியாழன் 12, செப்டம்பர் 2024 4:01:44 PM (IST)
தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படுவதில் முதல் அமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில், ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக மாநாடு குறித்தும், மதுவிலக்கு குறித்தும் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது; "தி.மு.க அரசை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்தவில்லை, கொள்கை ரீதியான முடிவுக்காக நடத்துகின்றனர். விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பைதான் திருமாவளவன் விடுத்துள்ளார்.
மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்-அமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. மதுக்கடைகளை என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்றே முதல்-அமைச்சர் நினைக்கிறார். ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். இங்குள்ள சூழலை பொறுத்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்." இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
ராஜாSep 17, 2024 - 01:09:28 PM | Posted IP 172.7*****
கேட்கிறவன் கேன பையனா இருந்தா எரும மாடு கூட ஏரோபிளேன் ஓட்டும் இந்த பழமொழி தான் இதற்கு கரெக்டான பழமொழி
விஜய் விஜய்Sep 14, 2024 - 10:18:52 AM | Posted IP 162.1*****
தேர்தல் வரும்போதுதான் விடியல் இந்து கோவில்களுக்கு வருவது போல நடிப்பார்கள்.
peoplesSep 13, 2024 - 03:14:59 PM | Posted IP 162.1*****
தேர்தல் வரும்போதுதான் இது மாதிரி டிராமா நடக்கும் .
தமிழன்Sep 12, 2024 - 07:09:21 PM | Posted IP 162.1*****
மொத்தத்தில் திருமாவளவன் தி மு க வில் இருந்து விலக ஆரம்பித்துவிட்டார். ஆதலால் தி மு க வை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார் என்பது உண்மை.
மேலும் தொடரும் செய்திகள்

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)










sankarSep 18, 2024 - 09:12:42 AM | Posted IP 172.7*****