» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தூய்மைப் பணியாளர்கள் குறித்து திமுக அரசுக்கு அக்கறையில்லை : அண்ணாமலை

திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:41:57 PM (IST)

தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், தி.மு.க. அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆவடி அருகே, பாதாளச் சாக்கடையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், தூய்மை பணியாளர்களைப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்ய வைத்ததற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம். ஆனால் அதன் பின்னரும், தி.மு.க. அரசு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஊழியர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், தமிழகத்தில், நாட்டிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், தி.மு.க. அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது உயிரிழந்துள்ள ஊழியர் குடும்பத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பின்படி ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory