» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு: 3வது முறை பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து!
திங்கள் 10, ஜூன் 2024 12:48:47 PM (IST)
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர் இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார். தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி கையெழுத்திட்டிருக்கிறார்.
இது பற்றி பேசிய மோடி, முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.