» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி

திங்கள் 18, மார்ச் 2024 4:32:17 PM (IST)



நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று 4 முனைப்போட்டி நிலவுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்வதில் அவசரம் காட்ட தொடங்கி உள்ளன. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. 

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் சேருவது உறுதியாகி விட்டதாக இன்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெறுகிறது.

பா.ஜ.க கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணி, அதி.மு.க கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.


மக்கள் கருத்து

REAL REALMar 19, 2024 - 04:00:29 PM | Posted IP 172.7*****

SIMONDY செபாஸ்டியன் கோமாளி கட்சியெல்லாம் சேர்க்காதீர்கள், டம்மி பீஸ். அதை தவிர்த்து மும்முனை போட்டிதான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory