» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
வெள்ளி 8, மார்ச் 2024 4:32:25 PM (IST)
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, "இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும்.சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இதுவரை ரூ.918-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818-க்கு விற்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST)









