» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மதுக் கடைகளை திமுக அரசு மூடாது : அண்ணாமலை விமர்சனம்

புதன் 18, அக்டோபர் 2023 12:09:08 PM (IST)



திமுகவினரே மது உற்பத்தி செய்வதால், மதுக் கடைகளை திமுக அரசு மூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கிய அண்ணாமலை, மேட்டூர் சாலையில் யாத்திரையை நிறைவு செய்தார். அந்தியூர் பிரிவு பகுதியில் பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் அணைகள் கட்டப்பட்டன. 

ஆனால், திமுக அரசு மதுக்கடைகளை மட்டும் திறந்து வருகிறது. திமுகவினரே மது உற்பத்தி செய்வதால், மதுக்கடைகளை மூட மாட்டார்கள். திமுக தலைவரின் மகள் என்பதால்தான் கனிமொழிக்கு எம்.பி.பதவி கிடைத்தது. ஆனால், மற்ற பெண்களுக்கு திமுகவில் பதவி கிடைக்காது. சாதாரண பெண்களும் எம்.பி., எம்எல்ஏ-வாக வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார். 

தமிழகத்தில் பட்டாசு விபத்துகள் தொடர்ந்து நேரிடுவது வேதனை அளிக்கிறது. இந்தஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மாதம்தான் பட்டாசு தயாரிப்பு தொடங்கியது. சீன பட்டாசுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 9 லட்சம் தொழிலாளர்களின் நலன்கருதி, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். ஆனால், நமது கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அரசு அனுமதிக்க வேண்டும். அதில் அரசியல் உள்நோக்கம் கூடாது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையூறு செய்யப்பட்டுள்ளது. லியோ திரைப்பட வெளியீடு விவகாரத்தில், அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


மக்கள் கருத்து

JAY JAYOct 26, 2023 - 04:33:36 PM | Posted IP 172.7*****

சாமி, தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி சாராய தொழிற்சாலை நடத்தவில்லை. பிஜேபி ஆளும் மாநிலத்தில் எந்த பிஜேபி கட்சி நிர்வாகியும் சாராய ஆலையை நடத்தவில்லை......

முட்டாள்Oct 19, 2023 - 08:41:31 AM | Posted IP 162.1*****

ஆமா மதுபான ஆலைகள் எல்லாம் அரசியல்வாதிகளுடையது . அதான் திருட்டு துட்டு கட்சி

சாமிOct 18, 2023 - 06:14:20 PM | Posted IP 172.7*****

ஓஹோ அதனால் தான் பீ ஜெ பி ஆளும் மாநிலங்களில் எல்லாம் மதுக்கடைகளை எல்லாம் மூடி விட்டு ஆட்சி நடத்துகிறார்களோ, இத்தனை நாள் இது தெரியாதே

JAY JAYOct 18, 2023 - 04:10:18 PM | Posted IP 172.7*****

இது தெரிந்த விஷயம்தானே? திமுக கலைஞர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடனே மது விலக்கு என்றார். கிட்ட தட்ட 40 வருடங்களுக்கு மேலாகி விட்ட்து.....இன்னும் நடக்கவில்லை. இது திராவிட மாடல் , இவர்கள் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள்.......மக்கள்தான் தீர்ப்பு கொடுக்கணும்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory