» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)
"திராவிட மாடல் ஆட்சியில் பெண்களும் குடிக்கின்றனர். தமிழகத்தின் எதிர்காலம் அனைவரும் போதைக்கு அடிமையாவது தான் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நாள்தோறும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு ஐடி ரெய்டு வரும்போது தகவல் சொல்லவில்லை என்று காவல்துறை சொல்கிறார்கள். ரெய்டு என்றால் யாருக்கும் சொல்லாமல் வருவது தான். இதிலிருந்து காவல் துறை கைப்பாவையாக மாறிவிட்டது என்பது தெரிகிறது. கேட்டு திறக்காமல் அதிகாரிகள் எகிரி குறித்து சோதனை செய்கிறார்கள் என்கிறார்கள் கேட் திறக்கவில்லை என்றால் அதிகாரிகள் ஏறி குதித்து சோதனை செய்வது தான் வழக்கம் வருமான வரி துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு, நியாயத்தை பேசுபவர்களுக்கு, கனிமவள கொள்ளையை தடுப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லி முதல்வர் தான் நேரத்திற்கு ஒரு டிரஸ் அணிந்து அவர் தான் மாடலாக மாறி வருகிறார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உலக பிரசித்தி பெற்றது இது ரத்து செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய தலைகுனிவு. முறையாக பள்ளி கட்டிடம் கட்டப்படுவதில்லை, மருத்துவக் கல்லூரிகளை முறையாக கட்டிடம் கட்டப்படுவதில்லை.
ஆனால் ஆங்காங்கே 500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கள்ளச்சாராயம் எலைட் பார் தானியங்கி மூலம் மது விற்பனை தமிழகமே மதுவுக்கு அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தமிழக அரசு மற்றும் ஆட்சி குறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து தரப்பினரையும் போதையில் வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று பெண்கள் குடிக்க ஆரம்பித்து விட்டனர். கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் அனைவரும் போதைக்கு அடிமையாவது தான்.
தூத்துக்குடி தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் எல்லாம் கண் துடைப்பு நாடகம். திராவிட மாடல் என்று கூறி தமிழக முதல்வர் நிமிஷத்துக்கு ஒரு டிரெஸ்ஸை மாட்டிக்கொண்டு மாடலாக மாறியுள்ளார். எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது. அதற்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். நாட்டிற்கு ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என்பதால் அதனை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஜனாதிபதியை அவர்கள் அழைத்து இருக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக பங்கேற்றிருக்க வேண்டும். அவரை ஏன் அழைக்கவில்லை என்று பாஜக பதில் சொல்ல வேண்டும். இந்த நல்ல நிகழ்வை நாம் அனைவரும் இந்திய மக்களாக வரவேற்போம். திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை என்றால் 2 ஆண்டுகள் இருன்ட ஆட்சி என்றார்
மக்கள் கருத்து
TAMILANமே 28, 2023 - 02:34:49 PM | Posted IP 172.7*****
SHE IS A GOOD PROACTIVE LADY IN TAMILNADU POLITICAL.....
ப்ரேமம் இல்லாத லதாமே 28, 2023 - 12:04:41 PM | Posted IP 162.1*****
இவா இன்னும் இருக்காளா? சிங்கம் மாதிரி இருந்த புருஷன டார்ச்சுர் பண்ணி முடமாக்கிட்டு பெரிய பருப்பு மாதிரி பேசுறா, என்னமோ கிழிச்ச மாதிரி.
ப்ரேமம் இல்லாத லதாமே 28, 2023 - 12:01:51 PM | Posted IP 162.1*****
இவா இன்னும் இருக்காளா? சிங்கம் மாதிரி இருந்த புருஷன Torture பண்ணி முடமாக்கிட்டு பெரிய பருப்பு மாதிரி பேசுறா, என்னமோ கிழிச்ச மாதிரி.
appoமே 30, 2023 - 06:34:14 PM | Posted IP 172.7*****