» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு சட்டப் போராட்டங்கள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசிய சாசன அமா்வும் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடா்பாக கட்டுப்பாடுகள் என்ற போா்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது மிகுந்த சிரமமாக உள்ளது. அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.


மக்கள் கருத்து

இரட்டை இலைமே 25, 2023 - 04:46:05 PM | Posted IP 172.7*****

அமிதாப் மிக்சர் மாமாவிற்கு கோபம் வந்திடுச்சு ......

ஜெ . ரசிகர்கள்மே 23, 2023 - 05:46:35 PM | Posted IP 172.7*****

திமுக உபிஸ் டயர் கும்பிடு புகழ் சொல்லிவிட்டார்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory