» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்

சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை குறும் புத்தனமானது, கற்பனையானது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள்மற்றும் மதிப்புகள் பற்றி தவறானகருத்தை பரப்பும் ஒரே நோக்கத்துடன் இது வெளியிடப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் இதுபோன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன.

இது போன்ற பொய்கள் நீண்ட காலம் நீடிக்க முடியாது. காஷ்மீரில் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அப்பட்டமான பொய்களை பரப்பியுள்ளது கண்டனத்துக்கு உரியது. இந்திய மண்ணில் தங்களின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற மனநிலை உடையவர்களை இந்தியர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory