» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும்:ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

புதன் 21, டிசம்பர் 2022 4:47:00 PM (IST)

எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காட்டமாக பேசினார்கள். எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். புரட்சித்தலைவியின் ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த இயக்கம் வேறு ஒருவரின் கைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவும் குடும்ப அரசியலை வீழ்த்துவதற்காகவும் ஓ.பன்னீர்செல்வத்திடம் புரட்சித் தலைவி 2 முறை ஆட்சியை ஒப்படைத்தார்.

இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். தன்னை விட கட்சிதான் முக்கியம் என்று கருதி விட்டுக் கொடுத்தவர். பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் திரும்ப வர வேண்டும் ஒற்றை குடையின்கீழ் ஓ.பி.எஸ். தலைமையில் திரள வேண்டும்என அவர்கள் பேசினர்.


மக்கள் கருத்து

JAY JAYDec 27, 2022 - 03:59:04 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டு நெப்போலியன், வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி செபாஸ்டியன் சீமான் கட்சியுடன் கூட்ட்டணி வைத்து கொள்ளலாமே?

AMMA RASIGARKALDec 23, 2022 - 03:35:08 PM | Posted IP 162.1*****

YOU ARE உண்மையான அதிமுக இல்லையே ? இது அமமுக B டீம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory