» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை!
சனி 17, டிசம்பர் 2022 5:24:37 PM (IST)
ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது. 15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 2வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ. 20 உயர்த்தியுள்ளனர்.
எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 28, மார்ச் 2023 11:48:09 AM (IST)

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம்: மக்களவை செயலகம் அறிவிப்பு!
வெள்ளி 24, மார்ச் 2023 3:22:38 PM (IST)

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
வியாழன் 9, மார்ச் 2023 12:03:06 PM (IST)

echiDec 18, 2022 - 10:31:07 AM | Posted IP 162.1*****