» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை: அனுராக் தாக்குர்
சனி 17, டிசம்பர் 2022 5:02:13 PM (IST)
காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை என விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார்.

அவர்கள் எல்லைப் பகுதியில் ஆயுதங்களைக் குவித்தபோது, நம் வீரர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்றனர். ஆனால் ராகுல் காந்தி அந்த சமயம் சீன அதிகாரிகளை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தும்போது கூட ராகுல் காந்தி அதன் மீது கேள்வி எழுப்பினார். இது 1962ஆம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல, இது 2014 இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புல்லட் ஜாக்கெட்டுகளையும், ஜெட் விமானங்களையும் ராணுவத்திற்காக வாங்கவில்லை. ஏன் ராணுவ வீரர்களுக்காக குளிர்கால பூட்ஸைக் கூட வாங்கவில்லை. ஆனால் இதையனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்துக்குத் தேவையான 300க்கும் அதிகமான கருவிகளை இந்தியா தற்போது தயாரிக்கிறது. இந்தியா தற்போது பாதுகாப்பு வெளிநாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்சார்பு இந்தியா திட்டம் அதற்கான அடித்தளம். டோக்லாம் விவகாரத்தின்போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சென்று எல்லைப் பகுதிகளை பார்வையிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 28, மார்ச் 2023 11:48:09 AM (IST)

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம்: மக்களவை செயலகம் அறிவிப்பு!
வெள்ளி 24, மார்ச் 2023 3:22:38 PM (IST)

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
வியாழன் 9, மார்ச் 2023 12:03:06 PM (IST)
