» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!
செவ்வாய் 1, நவம்பர் 2022 11:16:42 AM (IST)
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலைத் திருநாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையொட்டி புதுச்சேரி கடற்கடையில் நடைபெறக்கூடிய வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,056 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்தத் துறை சார்பில் நாளை நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும். மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும்.
புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21ஆம் ஆண்டில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. இது , 2021-22ஆம் ஆண்டில் சுமார் ரூ. 37 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டுகளாக தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது . மக்களின் நலன் கருதி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST)

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை
சனி 25, நவம்பர் 2023 11:45:28 AM (IST)

வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்
திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST)

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 14, நவம்பர் 2023 5:46:09 PM (IST)

அண்ணாமலையின் எண்ணம் தமிழகத்தில் பலிக்காது கனிமொழி எம்.பி பதிலடி
புதன் 8, நவம்பர் 2023 8:11:29 PM (IST)

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 7, நவம்பர் 2023 4:04:34 PM (IST)
