» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும்: தமிழக காங்கிரஸ் தீர்மானம்

திங்கள் 19, செப்டம்பர் 2022 5:25:31 PM (IST)

ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார்.  இதற்கிடையே, நாடு முழுவதும் 150 நாள்கள் 3,600 கி.மீ. இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இந்த பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்து குறைகளை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வரவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநில கமிட்டிகளின் பொதுக்குழுவில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory