» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை: தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு சசிதரூர் கடிதம்

சனி 10, செப்டம்பர் 2022 5:10:15 PM (IST)

காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசிதரூர், கார்த்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

http://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/Shashi-Tharoor-1_1662810076.jpgஇது தொடர்பாக, சசிதரூர், மணிஷ் திவாரி, கார்த்தி, பிரத்யுத் பர்தோலி , அப்துல் காலிக் ஆகியோர் எழுதிய கடிதம்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவது அவசியம். அது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது. ஆகவே, தேர்தலில் யாரெல்லாம் ஓட்டுப்போடலாம், தகுதிவாய்ந்தவர்கள் யார் என்பது குறித்த வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும். இந்த பட்டியலை வெளிப்படையாக அறிவித்தால் தான் வேட்பாளர்களுக்கும் தேர்ந்தெடுப்போருக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியும்.

வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ கமிட்டிகளுக்கம், 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்ற வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மையும், நியாயமாக நடப்பதையும் நினைத்து கவலைப்படுகிறோம். கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

கட்சியின் எந்தவொரு, உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என நாங்கள் ஆலோசனை தரவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory