» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளி 26, ஆகஸ்ட் 2022 4:02:31 PM (IST)"திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக விளங்குகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டது. 

நெல் சாகுபடி அதிகமாக இருப்பது தமிழ்நாட்டின் வளத்தைக் காட்டுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை அது மேலும் வளப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்கள் அதற்கான பயிற்சியை பெற்றிருந்தால் போதும். இதில் சாதி என்பது ஒரு அளவுகோலாக இருக்கக்கூடாது.

இத்தகைய சமூக நீதியை காக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர், நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்தனர். அதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும் இருந்திருந்தால் மகிழ்சியடைந்திருப்பார்கள். இது நம் கொள்கைக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி.

வேளாண் திட்டங்களாக இருந்தாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதாக இருந்தாலும் அனைத்திலும் தொலைநோக்கோடு நாம் முடிவெடுத்து செயல்படுவதால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமானது. அனைவரும் பாராட்டக்கூடிய, அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக இருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை பல்வேறு மாநில அரசுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. நம் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. மாநில சுயாட்சி என்ற தத்துவமும் திராவிட இயக்கம் கொடுத்த கொடைதான். 50 ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சிந்தனையில் உருவான திட்டங்களின் வளர்ச்சிதான்" என்று கூறினார்.


மக்கள் கருத்து

AIYVAIKOAug 30, 2022 - 03:47:38 PM | Posted IP 162.1*****

திராவிட மாடல் என்றால் என்ன என்று யாராவது சொல்லுங்கள்.

ஆமா படையல் வடை யல்Aug 29, 2022 - 10:00:47 PM | Posted IP 162.1*****

பெரிய காமெடி

sankarAug 26, 2022 - 05:43:01 PM | Posted IP 162.1*****

appudi ennappaa valiya kaattuneenga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory