» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
பிளவுகளை கடந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம் : சசிகலா பேட்டி
புதன் 10, ஆகஸ்ட் 2022 3:23:17 PM (IST)
பிளவுகளை கடந்து நிச்சயமாக ஒன்றிணையும் அதிமுக வெற்றி வாகை சூடும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம் என்று சசிகலா கூறினார்.
திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத் தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை வருகை தந்த வி.கே.சசிகலா, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை மற்றும் சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்" என்று கூறினார்.
அ.தி.மு.க.வில் குழப்பத்துக்கு தி.மு.க. தான் காரணம்
இதன் பின்னர் மாயத்தேவரின் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. என்பது தனிப்பட்ட ஒரு நபருக்கானது அல்ல. தலைவர் (எம்.ஜி.ஆர்.) கட்சி ஆரம்பிக்கும் போது, அது ஏழைகளுக்கான கட்சி என்று சொல்லி தான் ஆரம்பித்தார். யார் பொதுச்செயலாளர் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தொண்டர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள். அது தான் உண்மையான முடிவு. அதை நோக்கித்தான் இந்த இயக்கம் செல்லும்.
நிச்சயமாக வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வேன். அதற்குள், கட்சியை விட்டு விலகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விடுவேன். இது தான் அம்மாவுக்கும், தலைவருக்கும் நான் செய்கிற கடமையாக நினைக்கிறேன். அதை நான் நிச்சயம் செய்வேன். என்னை பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளையும் சந்தித்து வந்திருக்கிறேன். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் குழப்பத்துக்கும், பிளவுக்கும் தி.மு.க. தான் காரணம். இதன் பின்னணியில் தி.மு.க. உள்ளது. இவ்வாறு சசிகலா கூறினார்.
மக்கள் கருத்து
MAHAVEERANAug 21, 2022 - 02:54:28 PM | Posted IP 162.1*****
ஜெ . என்ற ஆளுமை திறன்மிக்க தலைவரை இந்த கூட்டம் தான் அவரது புகழை கெடுத்தவர்கள். டயர் கும்பிடு புகழ் அவரது ஸ்லீப்பர் செல்கள் ஓன்று சேர்ந்து திரும்பவும் அதிமுக வை சிதைக்க பார்க்கிறார்கள். EPS தலைமையில் மட்டுமே அதிமுக வலுப்பெறும், டயர் கும்பிடு GROUP ஐ சேர்க்காமல் இருந்தாலே அதிமுக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும்.
யாருAug 11, 2022 - 06:31:16 PM | Posted IP 162.1*****
40 ஆண்டுகளில் வேலைக்காரியாக இருந்து கிழித்த
JAYJAYAug 10, 2022 - 04:31:47 PM | Posted IP 162.1*****
உண்மைதான் ஜெயலலிதா ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாகும், நீங்கள் வருத்தப்படாதீர்கள்
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











MGR RASIGARKALAug 24, 2022 - 03:55:21 PM | Posted IP 162.1*****