» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
துரோகத்தின் அடையாளம்: ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
திங்கள் 27, ஜூன் 2022 4:56:20 PM (IST)
"துரோகத்தின் அடையாளம் என்று பார்த்தால், அண்ணன் ஓபிஎஸ்-தான் என்று கூற வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்ட சூழலில், கட்சியை வழிநடத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமியை பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, இக்கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர். 5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை வெளியில் சொல்ல முடியாது. ஓ.பன்னீர் செல்வம் பொருளாளராக நீடிப்பாரா என்பது ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தெரியவரும்.
பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பவர் ஓபிஎஸ். துரோகம் என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்று. அவரது மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார். இதனை எந்தவொரு அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது வளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த ஓபிஎஸ் படத்தை தொண்டர் ஒருவர் கிழித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‛அந்த இடத்தில் உடனடியாக ஓபிஎஸ் படத்துடன் கூடிய புதிய பேனர் வைக்கப்படும். படத்தை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மக்கள் கருத்து
makkalJun 29, 2022 - 04:23:16 PM | Posted IP 162.1*****
உண்மை. OPS பதவிக்கு யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பார். யாருடைய கார் டயரை கூட கும்பிடுவார். சசி க்கு சப்போர்ட் பண்ணுவது அவர் ஸ்லீப்பர் செல் என்று உறுதியாகிவிட்டது.
கந்தசாமிJun 28, 2022 - 08:53:07 PM | Posted IP 162.1*****
சசிகலாவிற்கு எடப்பாடி செய்த துரோகத்தை விடவா பன்னீர் செய்து விட்டார்
ஆமாமா ஆனந்தன் அவர்களேJun 28, 2022 - 06:50:39 PM | Posted IP 162.1*****
ஜெயலலிதாவே தமிழர் இல்லையே கன்னட நாட்டவர் தானே
ஆனந்தன்Jun 28, 2022 - 09:07:16 AM | Posted IP 162.1*****
ஜெயலலிதா உன்னை ஒதுக்கி வைத்தது எதனால் என்று சொல்ல முடியுமா தம்பி
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











UNMAIJul 13, 2022 - 04:44:14 PM | Posted IP 162.1*****