» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணம் : ஜெயக்குமார்

திங்கள் 20, ஜூன் 2022 12:09:39 PM (IST)

அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஆறு நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியை அப்பொறுப்புக்கு முன்னிறுத்தி அதிகாரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதில் எந்த உள்நோக்கம் இல்லை. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன். யார்  ஒற்றைத் தலைமை என எதுவும் கூறவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, பழனிசாமி பக்கமும் இல்லை. 

பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார். 


மக்கள் கருத்து

JAY JAYJun 20, 2022 - 04:13:38 PM | Posted IP 162.1*****

தங்களுடைய எண்ணமே MGR /ஜெ ஆகியோரின் தொண்டர்களின் எண்ணம். EPS அவர்கள்தான் சரியான தலைவர், அவரால்தான் ADMK வளர்ச்சிபெறும். OPS வந்தால் MGR ஆரம்பித்த ஜெ. அவர்களால் வானுயர உயர்த்தப்பட்ட அதிமுக கட்சி அமமுக போல காணாமல் போய்விடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory