» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அக்னி பாதை திட்டம் ராணுவத்தின் மரியாதையை குறைத்துவிடும்: வைகோ அறிக்கை

வெள்ளி 17, ஜூன் 2022 5:30:16 PM (IST)

அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, விமான படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல் 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்துவிடும்.

"இந்திய ராணுவத்தை காவி மயம் ஆக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே 'அக்னி பாதை' என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்தால் இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே 'அக்னி பாதை' திட்டத்தை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory