» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
மேகதாது அணை விவகாரம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
திங்கள் 13, ஜூன் 2022 5:11:50 PM (IST)
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது. மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது சரியல்ல என கடிதத்தில் தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளதாவது:” மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும்,மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும்,காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துரோகத்தின் அடையாளம்: ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
திங்கள் 27, ஜூன் 2022 4:56:20 PM (IST)

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)

அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணம் : ஜெயக்குமார்
திங்கள் 20, ஜூன் 2022 12:09:39 PM (IST)

அக்னி பாதை திட்டம் ராணுவத்தின் மரியாதையை குறைத்துவிடும்: வைகோ அறிக்கை
வெள்ளி 17, ஜூன் 2022 5:30:16 PM (IST)

அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்: கோஷ்டி பூசல் உச்சகட்டம்!
புதன் 15, ஜூன் 2022 11:59:44 AM (IST)

தமிழ்நாடு கஞ்சா விற்பனைக் கூடமாக மாறி வருவதைத் தடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 6, ஜூன் 2022 9:59:43 PM (IST)
