» சினிமா » செய்திகள்
கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான ப்ரீத்தி முகுந்தன், இந்தியக் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தி எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலின் உண்மைப் பின்னணி வெளியாகியுள்ளது.
நடிகை ப்ரீத்தி முகுந்தன், புகழ்பெற்ற இந்தியக் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் நெருங்கிய உறவுமுறை கொண்டவர் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், கணித மேதை ராமானுஜத்திற்கு நேரடி வாரிசுகள் அல்லது பிள்ளைகள் இல்லை. அவரது மனைவி ஜானகி அம்மாள் வழியிலேயே ப்ரீத்தி முகுந்தன் உறவு முறையாகிறார்.
ஜானகி அம்மாள் பிற்காலத்தில் தத்தெடுத்து வளர்த்த மகனான டபிள்யூ.எஸ். நாராயணனின் பேத்திதான் நடிகை ப்ரீத்தி முகுந்தன் என்பது குடும்ப விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் ராமானுஜத்தின் நேரடிக் கொள்ளுப் பேத்தி இல்லை என்றாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய வாரிசு என்பது தெளிவாகிறது.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் நடிகர் தனுஷின் 56-ஆவது திரைப்படத்தில், நாயகியாக நடிக்க நடிகை ப்ரீத்தி முகுந்தனைத் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது. 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக மாறியுள்ள ப்ரீத்தி முகுந்தன், தனுஷுடன் முதன்முறையாக இணையவுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட 'பிளாஸ்ட்' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில், எவ்வித காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க முழுக்கச் சண்டைக் காட்சிகளில் ப்ரீத்தி முகுந்தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் மூலம் இவரை ரசிகர்கள் 'ஆக்ஷன் குயின்' என்றும், 'ஆக்ஷன் அழகே' என்றும் அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவான 'இதயம் முரளி' திரைப்படத்தில் அதர்வா, கயாடு லோஹர் ஆகியோருடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:22:23 PM (IST)

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 9:45:55 PM (IST)

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:22:56 PM (IST)

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

