» சினிமா » செய்திகள்
போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான தேர்வு அழைப்புகள் மூலம் பணம் பறிக்க முயல்வதாக புகார் எழுந்துள்ளது.
"மெட்ராஸ்”, "கபாலி”, "காலா” போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் பா. ரஞ்சித் "நீலம்” எனும் பெயரில் பல்வேறு அமைப்புகளையும் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இந்த நிலையில், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சிலர் போலியான தேர்வு அழைப்புகள் (காஸ்டிங் கால்) விடுத்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும்; இதனால், கலைஞர்கள் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி, நீலம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "நீலம் என்ற பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத குழுக்கள் போலி காஸ்டிங் கால் மற்றும் ஆடிஷன் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
எங்களது நிறுவனம் எந்தவொரு ஆடிஷன் அல்லது காஸ்டிங் வாய்ப்பிற்காகவும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது எந்தவொரு வகையான கட்டணத்தையும் கோருவதில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறோம். அதிகாரப்பூர்வமான அனைத்து காஸ்டிங் அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களின் வழியே மட்டுமே வெளியிடப்படும்.
அனைவரும் எச்சரிக்கையாக இருந்து எந்த தகவலையும் நம்பும் முன் சரிபார்த்து, எங்கள் பெயரில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உருவ கேலி: யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி!
வெள்ளி 7, நவம்பர் 2025 4:41:03 PM (IST)

அனைவருக்கும் மறக்க முடியாத படமாக காந்தா இருக்கும் : துல்கர் சல்மான் நம்பிக்கை
வெள்ளி 7, நவம்பர் 2025 3:38:50 PM (IST)

மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

