» சினிமா » செய்திகள்
கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)
எல் 2 எம்புரான், துடரும் படங்களுக்காக கேரள அரசின் 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா.
தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பிரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.
இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை சீமா விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது மனோரமா கேரளா மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்றுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் எல் 2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

