» சினிமா » செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு: சேரன் இயக்கத்தில் அய்யா!!
வெள்ளி 25, ஜூலை 2025 12:29:05 PM (IST)

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, சேரன் இயக்கத்தில் அய்யா என்ற திரைப்படமாக உருவாகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை ஜி.கே.தமிழ்குமரன் தயாரிக்க சேரன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்த பயோபிக்கில் ராமதாஸாக நடிகர் ஆரி ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு.
இன்று ராமதாஸின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தரப்பினரும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ‘அய்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
பாமக கட்சியின் நிறுவனம் ராமதாஸ். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைவராக இருக்கிறார். சமீப காலமாக அப்பா - மகன் இருவருக்கும் இடையே கடும் உரசல் ஏற்பட்டு இருக்கிறது. அப்பா ஆதரவாளர்களை மகன் நீக்குவதும், மகன் ஆதரவாளர்களை அப்பா நீக்குவதும் நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

என் குடும்பத்தைக் கெடுத்ததே அந்த 3 எழுத்து நடிகைதான்.. ரவி மோகன் குற்றச்சாட்டு!
சனி 16, மே 2026 4:20:22 PM (IST)

பிரபல நடிகர் திலீப் ராஜ் மாரடைப்பால் மறைவு : கன்னடத் திரையுலகில் சோகம்!
புதன் 13, மே 2026 3:58:15 PM (IST)

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

