» சினிமா » செய்திகள்

பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதா? தெலுங்கு சினிமாவுக்கு, மகளிர் ஆணையம் எச்சரிக்கை!

ஞாயிறு 23, மார்ச் 2025 9:51:12 AM (IST)

திரைப்படங்களில் பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதா? என தெலுங்கு சினிமாவுக்கு, தெலுங்கானா மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை, ‘ஐட்டம் சாங்' எனப்படும் கவர்ச்சி குத்தாட்ட பாடல் படங்களில் தற்போது இடம்பெற்று வருகிறது. இதற்கு பெரிய சம்பளத்தில் முன்னணி நடிகைகளும் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள். சமீபத்தில் ‘ராபின்ஹூட்' படத்தில் ‘அதி தான் சர்ப்பிரைஸ்...' பாட்டுக்கு கெட்டிகா ஷர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. இப்படி படுகவர்ச்சி நடனத்தால் தெலுங்கு திரையுலகம் வசூலை வாரி குவித்து வந்த நிலையில், அதற்கு தெலுங்கானா மாநில மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திரைப் படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரியல்ல. தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள், பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும். அதையும் மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory