» சினிமா » செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 12:48:04 PM (IST)

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முதுநிலை டாக்டர்கள் குழுவினர், ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்கானித்து வந்தது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பூரண குணடைந்து மனைவி லதா மற்றும் உறவினர்கள், டாக்டர்களுடன் வழக்கம்போல பேசினார். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இன்றோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீடு திரும்பியுள்ளார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், டாக்டர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியல்!

வியாழன் 24, அக்டோபர் 2024 10:38:41 AM (IST)

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST)

Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory