» சினிமா » செய்திகள்

ரேவதி சம்பத் யாரென்று கூட தெரியாது : நடிகர் ரியாஸ் கான் விளக்கம்!

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 5:36:48 PM (IST)



தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகையை பார்த்தது கூட இல்லை என்று நடிகர் ரியாஸ் கான் கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய உன் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' எனக் கூறியதாக நடிகை ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் பிரபல நடிகராக இருப்பவர் ரியாஸ் கான். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தன்மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை யாரென்று கூட தெரியாது. நான் அவரை பார்த்தது இல்லை. எனக்கு மலையாளம் எழுத படிக்க தெரியாது. அந்த நடிகை நான் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்யட்டும். இதுவரை தன்மீது கிசுகிசு கூட வரவில்லை ' என்று நடிகர் ரியாஸ் கான் விளக்கம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory