» சினிமா » செய்திகள்

விஜய்யின் 69வது படம்: உறுதி செய்த இயக்குனர் எச்.வினோத்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 5:47:29 PM (IST)

விஜய்யின் 69வது 100 சதவீதம் கமர்ஷியல் படமா இருக்கும்,” என்று இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.

விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள 'தி கோட்' படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து 69வது படத்தில் நடிக்கும் விஜய் அப்படத்துடன் திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

அவரது 69வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப் போகிறார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்தன. ஆனால், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் அது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் வினோத்.

"அப்படம் 200 சதவீதம் விஜய் படமாக இருக்கும். கமர்ஷியலாக எல்லாரும் பார்க்கிற படமா இருக்கும். இந்தப் படத்துக்கு நான் 'கமிட்' பண்ணும் போதே, ''என்னோட படத்தை எல்லா வயசுல இருக்கிற பசங்களும் பார்ப்பாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க, எல்லாரும் பார்க்கிற படமா இருக்கணும்னு,' விஜய் சார் சொன்னாரு. ஒரு அரசியல் கட்சியையோ, ஒரு அரசியல்வாதியையோ தாக்குகிற படமா இல்லாம, ஒரு லைட்டான விஷயங்கள வச்சி, 100 சதவீதம் கமர்ஷியல் படமா இருக்கும்,” என்றார் வினோத்.

விஜய்யின் 69வது பட இயக்குனரே படம் குறித்து ஓபன் செய்துவிட்டதால் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தி கோட்' பட வெளியீட்டிற்குப் பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகலாம். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory