» சினிமா » செய்திகள்

70-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: பொன்னியின் செல்வன் படத்திற்கு 4 விருதுகள்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:39:09 PM (IST)



70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

2022-க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘காந்தாரா’ படத்துக்காக ரிஷப் ஷெட்டி வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்) படங்களில் நடித்ததற்காகப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு விருதுகள் சிறந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பு இன்று (ஆக.16) வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த சவுண்ட் டிசைன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)

சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2

சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் - மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா - மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகர் - ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா - இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மாளிகாபுரம் - மலையாளம்)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory