» சினிமா » செய்திகள்

சூப்பர் சிங்கர் - சீசன் 10: டைட்டில் வென்றார் ஜான்!

செவ்வாய் 25, ஜூன் 2024 4:19:10 PM (IST)

சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற ஜான் ஜெரோம், ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வென்றார். 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் -சீசன் 10 நிகழ்ச்சி, கடந்த 26 வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது. பாடகர் மனோ, பாடகிகள் சுஜாதா, அனுராதா ஸ்ரீராம், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கு ஜான் ஜெரோம், விக்னேஷ், ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இதில் ஜான் ஜெரோம் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. ஜீவிதா 2-ம் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 3-வது இடத்தை பிடித்த வைஷ்ணவிக்கு ரூ.5 லட்சமும் 4- மற்றும் 5-ம் இடங்களைப் பிடித்த நிதி மற்றும் விக்னேஷுக்கு தலா ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory