» சினிமா » செய்திகள்

கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

வெள்ளி 21, ஜூன் 2024 3:42:33 PM (IST)



கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோர் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முதல் ஒவ்வொருவராக பலியாகி வருகின்றனர். தற்போது வரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில் தான் கள்ளச்சராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கள்ளக்குறிச்சி சென்று சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு நேரில் புறப்பட்டு சென்றார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார். நேரடியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விஜய் அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory