» சினிமா » செய்திகள்
மஞ்சும்மள் பாய்ஸ்’ ஆஸ்கருக்கு தகுதியான படம்: அல்போன்ஸ் புத்திரன் கருத்து
புதன் 12, ஜூன் 2024 5:24:26 PM (IST)
மஞ்சும்மள் பாய்ஸ் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான மலையாளப் படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. உலகம் முழுவதும் ரூ.241 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் சவுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்துள்ளனர் இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படம் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், இது ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம். படத்தில் அனைத்தும் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றால் இனி ஆஸ்கர் விருதுகளை நம்பமாட்டேன். மலையாள சினிமாவை பெருமைப்படுத்திய சிதம்பரம் மற்றும் குழுவினருக்கு நன்றி. இந்தப் படத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த தாமதத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.