» சினிமா » செய்திகள்

அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பாலகிருஷ்ணா- வீடியோ வைரல்!

வியாழன் 30, மே 2024 12:26:41 PM (IST)



பொது நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி'. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். ஆனால் இருவரும் அதை கவனிக்காமல் இருந்ததால் தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி பின்னர் சிரித்து சமாளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என காட்டமாக பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில், பாலகிருஷ்ணா விளையாட்டாக அஞ்சலியை பிடித்து தள்ளியதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory